Anna serial: தாலியை கழட்டி தூக்கி எறிந்த ரத்னா; வெளுத்து வாங்கிய சண்முகம்!
கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் ரத்னா வாழ்க்கைக்காக பஞ்சாயத்து கூட்டப்பட்ட நிலையில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் ரத்னா வாழ்க்கைக்காக பஞ்சாயத்து கூட்டப்பட்ட நிலையில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
வெங்கடேஷ் ரத்னாவை பழிவாங்கும் எண்ணத்தோடு திருமணம்ஸ் செய்து, திருமணம் ஆனதுமே அடித்து கொடுமை படுத்திய நிலையில், ரத்னா தன்னுடைய வீட்டிற்கே வந்து என் அண்ணனுக்கு தங்கையாகவே வாழ்ந்து விடுகிறேன் என கூறினால். பின்னர் பரணி இருவரையும் சேர்த்து வைக்கும் விதமாக எடுத்த முயற்சியில் ஈடுபட, வெங்கடேஷ் தன்னுடைய சுயரூபத்தை காட்டி, ரத்னாவை - அறிவழகனோடு சேர்த்து வைத்து ஒரே அறையில் பூட்டி வைத்து அசிங்கப்படுத்தினான்.
இப்படியான நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட வெங்கடேஷ் தற்போது பெயிலில் வெளியே வந்துள்ள நிலையில், வெங்கடேஷ் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ரத்னா விலக வேண்டும் என பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது.
Anna Serial: வெங்கடேஷ் நெஞ்சில் காலை வைத்த சண்முகம்; பஞ்சாயத்தில் நடிக்க போவது என்ன?
பஞ்சாயத்தில் கூடிய பெரிய மனிதர்கள், யாரும் புருஷன் பொண்டாட்டியை பிரிக்கணும்னு ஆசைப்பட மாட்டாங்க என சொல்கிறார்கள். அதை தொடர்ந்து பரணி, ரத்னா ஆசைப்பட்டு அமைத்து கொண்ட வாழ்க்கை தான் இது.. ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ஒரு பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணுமோ அப்படி பார்த்துக்கிற தகுதி இவன் கிட்ட இல்லை என தன்னுடைய நாத்தனாருக்காக முன்னாடி வந்து பேசுகிறாள்.
இதை தொடர்ந்து பேசும் சண்முகம் என் தங்கச்சி வாழ்க்கை சந்தோஷமாக இருக்கணும்னு தான் இவனை கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனால் இவன் சந்தோஷமாக பார்த்துக்கல என சொல்கிறான். இதை தொடர்ந்து ரத்னா இவன் பொண்டாட்டியை மதிக்க தெரியாதவன். இவனுக்கும் எனக்கும் உறவுனு சொல்ல இந்த தாலி தான் காரணம்னா எனக்கு அந்த தாலியே வேண்டாம் என கழட்டி வெங்கடேஷ் மூஞ்சிலேயே தூக்கி எறிகிறாள்.
Anna Serial: ரிலீஸ் ஆன வெங்கடேஷ்; ரத்னா விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த சண்முகம்?
சண்முகம் வெங்கடேஷை தடுத்து நிறுத்தி, அவனை அடி வெளுக்கிறான். வெங்கடேஷை காப்பாற்ற வந்த ரவுகளுக்கும் அடி விழுகிறது. சௌந்தரபாண்டியன் இடையில் புகுந்து வெங்கடேஷ்க்கு அடி விழாதது போல் காப்பாற்றுகிறார். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.