கார்த்திகை தீபம் சீரியலின், நேற்றைய எபிசோடில் சாமுண்டேஸ்வரி ரேவதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க துப்பாக்கியை தன்னுடைய நெற்றியில் வைத்து மிரட்டி சம்மதிக்க வைக்கிறாள். அதே நேரம், என்னுடைய முழு விருப்பத்தோடு இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கவில்லை என்பதையும் ரேவதி கூறுகிறாள்.
விருப்பம் இல்லாமல் மணமேடை ஏறும் ரேவதி
மற்றொருபுறம், ராஜேஷ்வரி பாட்டியும் சென்டிமெண்டாக பேசி கார்த்திக்கிடம் சம்மதம் பெற, கார்த்திக் திருமணத்திற்கு சம்மதித்தாலும், பரமேஸ்வரி பாட்டியிடம் திருமணத்திற்கு முன் ரேவதியை பார்த்து பேச வேண்டும் என கண்டீஷன் போடுகிறான்.
தீபா பற்றி கூறிய கார்த்திக்
அடுத்து ரேவதியை சந்தித்து பேசும் கார்த்திக், தனக்கும் தீபாவுக்கு இடையே இருந்த திருமண வாழ்க்கை குறித்து பேசுகிறான். கார்த்திக்கிடம் பேசுவதற்கு கூட விருப்பம் இல்லாமல் இருக்கும் ரேவதி, அவன் பேசுவதை காதுகொடுத்து கேட்க மறுக்கிறாள்.
ரேவதி சொன்ன வார்த்தை:
இதையடுத்து ரேவதி தனது தோழிகளிடம், ட்ரைவர் ராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி மணமேடை ஏறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? இவர்களின் திருமணத்தால் ஏற்பட போகும் பிரச்சனை என்ன என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம். அதே போல் கடந்த 3 வாரங்களாக நடந்து வரும் திருமணம் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.