ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய சண்டே ஸ்பெஷல் எபிசோடில் நடக்கும் பரபரப்பான காட்சிகள் குறித்து பார்க்கலாம். கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக், ரேவதி என இருவருக்கும் சம்மதம் இன்றி, குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில், கார்த்திக் - ரேவதி என இருவரும் மேடை ஏறுகின்றனர்.
24
அரங்கேறும் கடத்தல் பிளான்
மாயா சிவனாண்டி, சந்திரகலா ஆகியோர் எப்படியும், இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். சிவனாண்டி ஆசிரமத்தில் வளரும் ரேவதியின் குழந்தை, தீபாவை கடத்த பிளான் போடுகிறார். இதை தொடர்ந்து சந்திரகலாவும் கார்த்திக்கு அபிராமி என்ற அம்மாவும் இருக்காங்க அவங்களையும் கடத்திடலாம் என்று சொல்கிறார்.
இவர்களின் திட்டத்தின் படி, குழந்தை மற்றும் அபிராமி என இருவரையும் கடத்தும் நிலையில், கார்த்திக் இந்த விஷயம் தெரிந்து, ரவுடிகளிடம் சிக்கிய அம்மா மற்றும் ரேவதியின் குழந்தையை காப்பாற்றுகிறான்.
44
திருமணத்தில் ஏற்படும் குழப்பம்
அடுத்து கல்யாண மண்டபத்திற்கு வரும் குழந்தை ரேவதியை பார்த்து அம்மா என்று அழைக்க, அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? அந்த குழந்தையால் குழப்பம் ஏற்படுமா? திருமணத்தில் திருப்பம் உண்டாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திருப்பங்களுடன் இந்த சண்டே ஸ்பெஷல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.