கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் ரேவதி கோவிலுக்கு வந்த நிலையில், கார்த்திக்கின் அம்மா அபிராமி இவர்களை பார்த்து சந்தோச படுகிறார். பரமேஸ்வரி பாட்டியும் பேரனுக்கு நினைத்தது போலவே திருமணம் நடந்து முடிந்ததால், முருகனுக்கு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகிறார்.
மகேஷுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள் சாமுண்டீஸ்வரி:
பெண்ணு - மாப்பிள்ளையை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சாமுண்டீஸ்வரி நேராக யாருக்கும் தெரியாமல், குடோனுக்கு வந்து, கடத்தி கட்டி போட்டு வைக்கப்பட்டிருக்கும் மகேஷை பார்க்கிறாள். அவன் சாமுண்டீஸ்வரியை பார்த்ததும் என்னை காப்பாத்துங்க, என்ன யாரோ கடத்தி இங்க கொண்டு வந்துவிட்டார்கள் என சத்தம் போட . சாமுண்டீஸ்வரி நீ கேடுகெட்டவன் என்பது எனக்கு தெரிந்து தான் உன்னை நான் கடத்தி இங்க அடைத்து வைத்திருக்கிறேன். என கூறி மகேஷுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள்.
கடும் கோபத்தில் ரேவதி:
இதை தொடர்ந்து, இன்னும் கொஞ்ச நான் நீ இங்கையே இரு. அப்பறம் நானே உன்னை விட்டுவிட சொல்கிறேன் என சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறாள். இங்கே கோவிலுக்கு சென்று வந்த கையோடு, கார்த்திக் மற்றும் ரேவதி வீட்டு வாசலில் வந்து காத்திருக்க... அவர்களுக்கு ஆரத்தி எடுத்து சாமுண்டீஸ்வரி வரவேற்கிறாள். பின்னர் அரிசி படியை தள்ளிவிடும் சடங்கை சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் செய்ய சொல்ல, அதற்க்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Karthigai Deepam: குழந்தை பற்றிய உண்மையை உடைத்த ரேவதி; என்ட்ரி கொடுக்கும் வில்லன் - என்ன நடக்கும்?