Pandian Stores 2: பழனியை அசிங்கப்படுத்த கீழ்த்தனமாக இறங்கிய சுகன்யா! கேவலப்படுத்திய பாண்டியன்!

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின், இன்றைய எபிசோடில் பழனிவேல் தன்னை டார்ச்சர் செய்கிறார் என்று சுகன்யா வீட்டில் உள்ளவர்களிடம் புகார் செய்து, தன்னை நல்லவர் போன்று காட்டிக் கொள்கிறார்.
 

Pandian Stores 2 Serial april 4th Episode update mma

வாய் கூசாமல் பொய் சொல்லி புதிய பிரச்னையை சுகன்யா:

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய 446ஆவது எபிசோடானது தனது கணவர் தன்னை படுக்கைக்கு அழைத்து டார்ச்சர் செய்கிறார் என்றும், முரட்டு தனமாக நடந்து கொள்கிறார் என்றும், மனைவிக்கு விருப்பம் இல்லை என்றால் விட வேண்டியது தானே என்றும் சுகன்யா வீட்டில் உள்ளவர்களிடம் வாய் கூசாமல் பொய் சொல்லி புதிய பிரச்னையை ஏற்படுத்துகிறார். உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி பேச முடியாமல், பழனிவேல் தனது நிலை குறித்து தானாக வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்.

Pandian Stores 2 Serial april 4th Episode update mma
Pazhanivel Crying:

வீட்டை விட்டு வெளியேறி சென்ற பழனிவேல்:

மேலும், வீட்டிலுள்ள அனைவரும் பழனிவேலுவை தவறாக பேச தொடங்க, இதனால், அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறி சென்ற பழனிவேல் அப்படியே கால்நடையாக நடந்து செல்கிறார். அடுத்தநாள் காலையில் அவரை தேடி சரவணன் வருகிறார். பிறகு எப்படியோ அவரை தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு கூட்டி வருகிறார்.

Pandian Stores: உண்மையை உடைத்த மீனா; ஆத்திரத்தில் அறைந்த பழனி! சுகன்யாவின் நாடகம் அரங்கேற்றம்!


Emotionally Depressed:

என்னை அசிங்கப்படுத்திவிட்டாள்:

இரவு முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்த பழனிவேலுக்கு சரவணன் கலர் வாங்கி கொடுக்கிறார். சுகன்யா சொன்ன மாதிரி எதுவும் நடக்கவில்லை. எல்லாமே பொய், நான் வேறொரு விஷயத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு அவள் கத்தி கூச்சலிட்டுள்ளார். என்னை அசிங்கப்படுத்திவிட்டாள். ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று இப்போது வருத்தப்படுகிறேன். சுகன்யாவை அண்ணன் கூட்டிட்டு வந்த போது நான் தாலி கட்டியிருக்க கூடாது. நான் செய்த மிகப்பெரிய தவறு சுகன்யாவை திருமணம் செய்தது தான் என்று அழுது புலம்புகிறார்.

Meena Talking About Pazhanivel:

எல்லா ஆண்களின் நிலையும் இப்படித்தான் இருக்குமோ?

திருமணத்திற்கு பிறகு எல்லா ஆண்களின் நிலையும் இப்படித்தான் இருக்குமோ என்ற எண்ணம் இப்போது எழுகிறது. எதுவுமே நடக்காதது போன்று சுகன்யா எல்லோரிடமும் எப்படியெல்லாம் நடிக்கிறார் என்று மீனா புரிந்து மட்டும் சரியாக புரிந்து கொண்டதையும் பார்க்கமுடிகிறது. ஏற்கனவே பழனிவேல் சித்தப்பாவைப் பற்றி நன்கு அறிந்த மீனாவிற்கு அவர் எவ்வளவு ஜாலியான டைப் என்று முன் கூட்டியே தெரியும்.

Pandian Store: காலேஜூக்கு போன குமரவேலுக்கு அடி - உதை! சிக்கிய சுகன்யாவை வெளுத்து விட்ட மீனா!

Meena Identified Suganya Character:

சுகன்யாவைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட மீனா:

ஆனால், திருமணத்திற்கு பிறகு அவர் முற்றிலுமாக மாறிவிட்டார். அவர் சிரித்து பேசி பழகி பார்க்க முடியவில்லை என்று ராஜீயும், மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், உனக்கு இதற்கு முன்னதாக சுகன்யாவைப் பற்றி நன்கு தெரியுமா என்று ராஜீயிடம் மீனா கேட்கிறார். அதற்கு நான் அவரிடம் பேசியது கிடையாது என்று பதிலளிக்கிறார். இறுதியாக எனக்கு அவரை முற்றிலும் பிடிக்கவில்லை. அவர் டிராமா ஆடிக் கொண்டிருக்கிறார் என்று மீனாவிற்கு சுகன்யாவைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு பேசுகிறார். அதோடு இன்றைய 445ஆவது எபிசோடு முடிவடைகிறது. நாளைய தினம் சுகன்யாவின் வேஷம் கலையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

vuukle one pixel image
click me!