200 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோவிலில் ஆதிதிராவிட மக்கள் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு!!

Jan 3, 2023, 12:02 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ள நிலையில் கோவில் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும். இதனால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பீஸ் மீட்டிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த மீட்டிங்கில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் அனுமதி பெற்று தருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன்குமார் மற்றும் ஆர்டிஓ பவித்ராவிற்கு இந்து அறநிலை துறை அனுமதி வழங்கிய நோட்டீஸ் அனுப்பியாதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் வைகுண்ட ஏகாதசி நாளான ஸ்ரீ வரதராஜ் பெருமாள் கோவிலில் ஆதிதிராவிடர் மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கியதைடுத்து அப்பகுதி கிராம மக்கள் மேளதாளங்களுடன் வெகு விமர்சியாக ஊர்வலமாக வந்து கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் முதல்முறையாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆர்டிஓ பவித்ரா தலைமையில் சிறப்பு வழிபாடு பூஜை செய்தனர்.

மேலும் கோவில் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது கோயிலுக்குள்ளே சென்றது எடுத்து அப்பகுதி ஆதிராவிடர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் விழுப்புரம் சரக
டி ஐ ஜி பாண்டியின் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட மூன்று ஏடிஎஸ்பிக்கள், நான்கு டிஎஸ்பிக்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.