Apr 4, 2023, 9:49 AM IST
எஸ்ஆர்எம்யூ அகில இந்திய பொது செயலாளர் கண்னையா திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ரயில்வே துறையில் 109 ரயில்களை தனியாருக்கு வழங்குவதற்காக முயற்சி செய்தார்கள். மேலும், 4ரயில் நிலையங்களான திருச்சி, மதுரை, திருநெல்வேலி தனியாருக்கு வழங்குவதற்கும் மேலும் 1400கிலோமீட்டர் ரயில் பாதைகளை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், ரயில்வே ஊழியர்களின் எதிர்பாலும் பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாததால் இத்திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தியுள்ளோம் என்றார்.
சரக்கு ரெயில்களை கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை இந்த நான்கையும், தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, 1500 குளிர்சாதன பெட்டிகளை வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இதேபோல் 800 ரயில் இன்ஜின்ங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருக்கிறார்கள். இதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ரயில்வேயும், மத்திய அரசும் செலவு செய்துள்ளது.
இனி வரும் காலங்களில், ரயில்வே துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது இருக்காது. எனவே வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி வருகிறேன் என கண்ணையா தெரிவித்தார். பேட்டியின் போது நிர்வாகி வீரசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.