திருச்சியில் இராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடத்தில் அமர்ந்து கம்பராமாயண பாடல்களை நெகிழ்ச்சியுடன் கேட்ட மோடி

திருச்சியில் இராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடத்தில் அமர்ந்து கம்பராமாயண பாடல்களை நெகிழ்ச்சியுடன் கேட்ட மோடி

Published : Jan 20, 2024, 03:50 PM ISTUpdated : Jan 20, 2024, 03:51 PM IST

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மண்டபத்தில் இராமாயணத்தை கம்பர் இயற்றிய நிலையில் அதே இடத்தில் அமைர்ந்து பிரதமர் மோடி இன்று கம்பராமாயண பாடல்களை கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் உள்ள மண்டபத்தில் தான் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் கவி சக்கரவர்த்தி கம்பர்  இராமாயணத்தை அரங்கேற்றம் செய்தார். இன்றைய தினம், அந்த வரலாற்று சிறப்புமிக்க மண்டபத்தில் நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி கம்பராமாயண பாடல்களை பாட கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். 

தமிழ் இலக்கியத்தையும், ஆன்மீகத்தையும் தனது உயிராக கொண்டு பணி செய்துவரும் மரியாதைக்குரிய கம்பவாரிதி திரு இலங்கை ஜெயராஜ் அவர்கள், தமிழ் இலக்கிய நூல்களை இயற்றுவதில் பன்முகத்தன்மை கொண்ட பேராசிரியர் திரு ஞானசுந்தரம் அவர்கள், மற்றும் குழந்தை மருத்துவத்தில் நிபுணரும் கம்பராமாயணத்தின் மீது மாறா பற்று கொண்டவருமான டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கர்நாடக இசையில் தனித்துவத்துடன் திகழும் திரு சிக்கில் குருச்சரண் அவர்கள் கம்பராமாயணத்தை அழகு தமிழில் கவி பாடினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more