திருச்சி அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

திருச்சி அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

Published : Jul 26, 2023, 10:42 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சென்னையில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்னையில் இருந்து போடி நோக்கி புறப்பட்டது. பேருந்தை விழுப்புரம் மாவட்டம் சிறுவையை சேர்ந்த தங்கமணி என்பவர் ஓட்டி வந்தார். சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மரவனூர் பகுதியில், சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது நெடுஞ்சாலையில் மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது பேருந்து ஏறி இறங்கியது. இதில், நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பாலத்தின் சுவற்றில் மோதியது. இதில் பேருந்தின் முன் சக்கரங்கள் கழன்று, பேருந்து அருகிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை. 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மட்டும் சிறு காயத்துடன் தப்பினர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சைக்கு பின் அனைவரும் வீடு திரும்பினர். தனியார் பேருந்து விபத்து குறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more