Jan 11, 2023, 4:39 PM IST
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சி ரயில் நிலையம் எதிரே கார்டன் ஒன்று உள்ளது. இந்த கார்டனில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் செல்வராஜ், கண்மணி தம்பதியினர். செல்வராஜ் தீவிர திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். இவரது வீட்டில் உள்ள வேப்பமரத்தில் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து பால் வடிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக அதிகமாக பால் வடிந்து வருகிறது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வேப்பமரத்தில் பால் வடிவதை ஆச்சரியத்துடன் பார்த்து வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி பூஜைகள் செய்து வணங்கி செல்கின்றனர்.