திடீரென ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மூதாட்டி; சாதுர்யமாக மூதாட்டியை காப்பாற்றிய பெண் கேட் கீப்பர்

திடீரென ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மூதாட்டி; சாதுர்யமாக மூதாட்டியை காப்பாற்றிய பெண் கேட் கீப்பர்

Published : Oct 03, 2023, 08:48 AM IST

திருச்சியில் ரயிலை கடக்க முயன்று ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட மூதாட்டியை பெண் கேட் கீப்பர் சாதுர்யமாக செயல்பட்டு மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில்வே கேட்டில் ரயில் நிற்கும் போது பொதுமக்கள் கடந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று ரயில்வே கேட்டில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது வழக்கம் போல பொதுமக்கள் கேட்டை கடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் ரயிலின் அடியில்  நுழைந்து எதிர் திசைக்கு செல்ல முயன்றார்.  

திடீரென சரக்கு ரயில் புறப்பட்டதும் அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தின் நடுவே விழுந்தார். இதனைக் கண்ட கேட் கீப்பர் ஈஸ்வரி உடனடியாக அந்த மூதாட்டியை அப்படியே படுக்கச் சொன்னார். உடனடியாக சதுர்த்தியமாக ரயிலை நிறுத்தி அதன் பின்னர் மூதாட்டி எந்தவித காயம் இன்றி தண்டவாளத்தின் அடியிலிருந்து வெளியே வரவழைத்தனர்.

பின்னர் சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. மூதாட்டி விழுந்ததும் உடனடியாக வேகமாக செயல்பட்டு சதுர்த்தியமாக ரயிலை நிறுத்தி மூதாட்டியை காப்பாற்றிய ரயில்வே கேட் பணியாளர் ஈஸ்வரியை பொதுமக்கள் மனதார பாராட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more