முகமூடி கொள்ளையர்களை போட்டு தாக்கிய முதியவர்.. நிஜ முத்துவேல் பாண்டியன் செஞ்ச சம்பவம்..

Oct 22, 2023, 9:32 PM IST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, வடகாடு பகுதியில் வசித்து வரும்  வைரக்கண்ணு வயது 83 என்பவரும் அவருடைய மகன் பொதுவுடைமூர்த்தி  என்பவருடைய மகன் சஞ்சய்காந்தி வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில்,  மேற்கண்ட வைரக்கண்ணு தனது மருமகள் ஜெயலெட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நள்ளிரவு வீட்டில் இருக்கும்போது, வீட்டிற்கு வெளியே நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

உடனே மேற்கண்ட வைரக்கண்ணு வெளியே வந்து பார்த்தபோது முகமுடி அனிந்த சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் மற்றும் முகமுடி அனியாத 2 நபர்கள் நின்றுள்ளனர். அப்போது முகமுடி அணிந்த இரண்டு நபர்கள் வைரக்கண்ணுவை பிடித்துகொள்ள, முகமுடி அணிந்த மற்ற இருவரும் வைரக்கண்ணுவின் வீட்டிற்குள் சென்று அவரது மருமகளிடம் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த நகைகைள பறிக்க முயற்ச்சி செய்துள்ளனர்.

அப்போது வைரக்கண்ணு மற்றும் ஜெயலெட்சுமி சத்தம்போட அவர்களை விட்டுவிட்டு மேற்கண்ட எதிரிகள் தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றுள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்த, முத்துப்பேட்டை பொறுப்பு துணைக்காவல் கண்காணிப்பாளர் சரவணன், முத்துப்பேட்டை உட்கோட்ட தனிப்படையினர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதை தொடர்ந்து குற்றவாளிகள் இருசக்கரவாகனத்தில் தப்பி சென்ற வழிதடங்களில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.

குறிப்பாக நாச்சிகுளம் ஆவின் பாலகத்தில் உள்ள CCTV காட்சிளில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடுவதும் அவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் உள்ள CCTV காட்சிகளை தொடர்ந்து அய்வு செய்ததில் சம்பவத்தில் தொடர்புடைய கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவின்குமார் 26, ராஜேஷ் 22, விளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா 19, கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த சிவனேஷ் ஆகிய நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நான்கு நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது இவர்கள் முத்துப்பேட்டை அருகே பெருக வாழ்ந்தான் பகுதியில் கொத்தனார் வேலை மற்றும் சென்ட்ரிங் வேலை செய்து வருவதாகவும் இரவு நேரங்களில் வடகாடு பகுதியில் உள்ள காட்டின் அருகே சென்று தொடர்ந்து மது அருந்துவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்போது வைரக்கண்ணனின் வீடு தனியாக இருப்பதும் அந்த வீட்டை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக கூறினார்கள் மேலும் சிறப்பாக செயல்பட்டு இரவோடு இரவாக அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்த முத்துப்பேட்டை பொறுப்புத் துறை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?