பைனான்ஸ் ஊழியரின் அரைகுறை பயிற்சியால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் விபத்து

பைனான்ஸ் ஊழியரின் அரைகுறை பயிற்சியால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் விபத்து

Published : Apr 03, 2023, 03:42 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நிதிநிறுவன ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் அதிவேகமாக சென்று மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த மங்கரசுவளைய பாளையம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் அவிநாசி, திருப்பூர் சாலையில் உள்ள வண்ண கூறை தகடு உற்பத்தி செய்யும் கம்பெனியில் சரக்கு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று ஆட்டையம்பாளையம் அருகில் வேனை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனியார் நிதி நிறுவன மேலாளர் வீரமணி, நிதி நிறுவன ஊழியர் கிருஷ்ணன் மற்றும் முருகேஷ் ஆகிய மூவரும் குமரேசனிடம் பணத்தை கட்டச் சொல்லி பேசி உள்ளனர்.

 

கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சோலார் கார் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த கார்கள்

 

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், முருகேஷ் என்பவர் அத்து மீறி வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக கோவை சாலையில் அவிநாசி நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகத்தின் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த மைய தடுப்பு மீது ஏறி அவிநாசி நோக்கி வந்த மினி சரக்கு வேன் மீது மோதியது.

 

Watch : மாணவிகளுக்கு ஈவ்டீசிங் தொல்லை! - "நானும் ரவுடி தான்" என வசனம் பேசிய நபர் கைது!

 

இதில் மினி சரக்கு வேன் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த அவிநாசி போக்குவரத்து காவல் துறையினரின் வாகனத்தின் பின் பகுதியில் லேசாக உரசியது. இந்த விபத்தில் மினி சரக்கு வேன் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. வேன் கட்டுப்பாட்டை இழந்து வருவதை கண்ட போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் வேகமாக ஒதுங்கி ஓடி உயர் தப்பினர். இந்த விபத்து  குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

00:30திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்
00:41Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
02:59கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!
02:08திருப்பூர்.. போதையால் சீரழியும் சிறுவர்கள்.. பொதுவெளியில் போதைப்பொருள் உட்கொள்ளும் அவலம் - Viral Video!
00:45திருப்பூரில் அதிகரிக்கும் விபச்சாரம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய அழகிகள்..
02:14கொடியை கழட்ட சொன்ன பாஜகவினர்.. ஆபாசமாக திட்டிய அதிமுகவினர்.. கடும் மோதல்.. பல்லடத்தில் பரபரப்பு
29:57பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகிவிடும்.. எச்சரித்த முதல்வர் முக ஸ்டாலின்..
03:58அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா தெப்போற்சவம் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்
00:46முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.3,33,500/- பணம் பறிமுதல்!
02:31திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம்; மெய்சிலிர்த்து பார்த்த நடிகர் ரஞ்சித்
Read more