நீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Oct 31, 2023, 3:26 PM IST

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. இந்த மழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பல மணி நேரம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளான குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. 

குறிப்பாக பிரதான அருவி, பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து சற்று குறைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தை தொட்டு தண்ணீர் கொட்டி வருவதால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அருவியின் ஓரத்தில் நின்று மட்டும் சுற்றுலா பயணிகள் குறித்து செல்வதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பழைய குற்றாலம் அருகில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் இதன் தொடர்ச்சியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்பொழுது, பழைய குற்றாலம், பிரதான அருவியில் நீராடிச் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.