Watch : மனைவியுடன் சேர்ந்து தாயை எரித்து கொன்ற மகன்! இருவரும் கைது! - போலீசார் விசாரணை!

Watch : மனைவியுடன் சேர்ந்து தாயை எரித்து கொன்ற மகன்! இருவரும் கைது! - போலீசார் விசாரணை!

Published : Nov 01, 2022, 03:12 PM IST

நெல்லையில் மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினையில் பெற்ற மகனே மனைவியுடன் சேர்ந்து தாயை எரித்து கொலை செய்தது அம்பலம். கணவன் மனைவி இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
 

திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை (47). தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது தாய் அரசம்மாள் வயது 70, மகன் அண்ணாமலைக்கு திருமணம் முடிந்த நிலையில் அரசம்மாள் மகனின் வீட்டிலையே தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மூதாட்டி அரசம்மாள் வீடு அருகே தீயில் கருகி நிலையில் உயிரிழந்தார். இது குறித்து நெல்லை தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அண்ணாமலையிடம் விசாரித்தபோது குடும்ப பிரச்சனையில் தனது தாய் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தொடர்ந்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்த போது அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து விசாரித்த போது மூதாட்டி அரசம்மாளை மகன் அண்ணாமலை மற்றும் மருமகள் அனிதா இருவரும் சேர்ந்து தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

அதாவது குடும்ப பிரச்சினை மற்றும் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணாமாலையின் மனைவி அணிதா அரசம்மாளை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது போது கணவருடன் சேர்ந்து மாமியாரை தீர்த்து கட்ட அனிதா முடிவெடுத்துள்ளார் இருவரும் திட்டமிட்டபடி வீட்டில் கிடந்த விறகில் தீ வைத்து கடுகளவும் மனிதாபிமானமில்லாமல் வயதான மூதாட்டியான அரசம்மாளை தீக்குள் தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது. எனவே தற்போது தாலுகா காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா இருவரையும் கைது செய்தனர். குடும்பப் பிரச்சனையில் 70 வயது முதட்டியை பெற்ற மகனே தனது மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

01:16Viral Video: நெல்லையில் மனநலம் பாதித்த கணவனை கம்பால் தாக்கி கொடுமை படுத்திய பெண்; வீடியோ வெளியாகி பரபரப்பு
00:24எமன் ரூபத்தில் வந்த மாடு.. பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் துடிதுடித்து பலி! வெளியான பகீர் வீடியோ!
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
00:58பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்
04:35கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!
04:41நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..
08:41அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
05:14நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?
01:4925 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
00:52கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்
Read more