தேனியில், பணி செய்ய விடாமல் தடுக்கும் விசக செயலாளர்!- நடவடிக்கை கோரி ஊராட்சி மன்ற தலைவர் புகார்!

தேனியில், பணி செய்ய விடாமல் தடுக்கும் விசக செயலாளர்!- நடவடிக்கை கோரி ஊராட்சி மன்ற தலைவர் புகார்!

Published : Jun 13, 2023, 03:14 PM IST

விசிக மாவட்ட செயலாளர் பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.
 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சீப்பாலக்கோட்டை கிராம ஊராட்சியில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஊராட்சி மன்ற தலைவியாக கார்த்திகா தேவி உள்ளார்.

இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி குறித்த, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், சுருளி தொடர்ந்து பல்வேறு இடையூறு செய்து வருவதாகவும், மாதம் தோறும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தொடர்ந்து ஊராட்சி மன்ற வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய விடாமல் மிரட்டி வருவதாக குறிப்பிட்டுளார்.

மேலும் பொது மக்களை தூண்டி விட்டு குடிநீர் வசதி இல்லை என சாலை மறியல் செய்தும், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவி கார்த்திகாதேவி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

01:11தேனி: பேருந்தில் பயணித்த பெண் தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்.. வைரலாகும் CCTV காட்சிகள்..
08:50அரக்கத்தனமான ஜென்மம்.. அந்த வார்த்தையை சொல்லி எடப்பாடி பழனிசாமியை திட்டிய டிடிவி தினகரன்.!
01:44தாய்க்கு பிரமாண்ட கோவில்; கையேந்தி வருபவர்களுக்கு அள்ளி கொடுக்கும் மருத்துவர் - தேனியில் சுவாரசியம்
03:06நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம்; சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி - ஜூனியர் எம்ஜிஆர்
02:23தனது வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம்
04:20கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தேனி தேவராஜ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்
02:28தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணம் பெறவேண்டி தொண்டர்கள் அங்கபிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு
01:31வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை கடித்து குதறிய தெருநாய்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
02:04தொடர் மழை எதிரொலி; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு தடை
01:25கடைசி நேரத்தில் ஓடி வந்த விமல்; கதறி அழுத மாரிமுத்துவின் மகன்