script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி

Mar 19, 2024, 12:05 PM IST

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இவ்வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று வருகின்றன. இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாயக்கன்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் மது போதையில் ஒருவர் சாலையின் நடுவில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக அடாவடியில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.