புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்

புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்

Published : Jan 27, 2024, 05:17 PM IST

சாயல்குடியில் இரவு பத்து முப்பது மணிக்கு மேல் புரோட்டோ தர மறுத்ததால் ஹோட்டல் உரிமையாளரை அடித்து துவைத்த மர்ம வாலிபர்கள், CCTV காட்சிகள் வைரல்.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 45). இவர் சாயல்குடி கன்னியாகுமரி செல்லும் சாலையில் ஜமாலியா என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி இரவு 10.30  மணி அளவில் நான்கு வாலிபர்கள் உணவகத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது புரோட்டோ உள்ளிட்ட உணவு பொருட்கள் முடிந்து விட்டதால் கடையை அடைப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர்கள் அப்துல் லத்தீப்பிடம் புரோட்டோ போடு என கூறியுள்ளனர். புரோட்டோ தீர்ந்து விட்டது என லத்தீப் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு வாலிபர்களும் உணவகத்தில் இருந்த விறகு உள்ளிட்டவற்றால் உரிமையாளரை அடித்து துவைத்தனர். 

அதிலும் ஆத்திரமடங்காமல் அருகே இருந்த கல்லாப்பெட்டியை கீழே தள்ளி சேதப்படுத்தி ஆத்திரம் தீராமல் உரிமையாளரை அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி அடித்து அவரை காயப்படுத்தினர். இந்நிலையில் உணவக உரிமையாளர் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03:14Vaikasi Amavasai 2024: வைகாசி மாத அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் குவிந்த பக்தர்கள்!
02:38அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
01:55சித்திரை மாத அமாவாசை! முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!
00:58நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!
01:03போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச புத்தகம் வழங்கிய இளைஞர் மன்றத்தினர்
01:48ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து மெய் சிலிர்த்த மக்கள்
02:12மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு
01:52ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
03:53புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்