61 வயதில் சைக்கிளில் உலகை சுற்றும் வாலிபன்; செல்பி எடுத்து மகிழ்ந்த கரூர் மக்கள்

61 வயதில் சைக்கிளில் உலகை சுற்றும் வாலிபன்; செல்பி எடுத்து மகிழ்ந்த கரூர் மக்கள்

Published : Nov 01, 2023, 01:56 PM IST

உலகம் சுற்றும் வாலிபன் என கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், உலகம் சுற்றும் முதியவர் என்றால் நம்ம முடிகிறதா? இதோ 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கரின்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (வயது 61). இவர், 1962ம் ஆண்டு பிறந்தார். திருமணம் ஆகாத இவர்,  தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில் பெரிய அளவில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் சமையல் செய்து வந்த இவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இவர் உலகம் முழுதும் சுற்றி பார்க்க வேண்டும் என மனதில் ஆவல் தோன்றியுள்ளது. 1991-ல் இருந்து தற்போது வரை 120 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா வழியாக 2014, 2015, 2018 தற்போது 2023ல் பயணம் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு முதல் இந்த முறை சைக்கிள் ஓட்டி உலகை சுற்றும் பயணத்தை தொடங்கியுள்ளார். நான் பயணிக்கும் பைக் ஒரு Recombinant பைக், Chez Republic பைக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட AZUB. 2013ல் இருந்து 40 ஆயிரம் கிமீக்கு மேல் இந்த சைக்கிளில் பயணித்துள்ளார். தினசரி சராசரியாக ஒரு நாளைக்கு 80-125கிமீ செல்கிறார். போகும் இடங்களில் உணவகங்களில் தங்கி செல்வதாகவும், நாட்டைப் பொறுத்து பல நேரங்களில் சொந்த உணவை சமைத்து சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் அருகே கடந்து சென்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதேபோன்று சாலையில் செல்லும் பொழுது பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். உலகம் சுற்றும் வாலிபன் என கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், 61 வயதில் உலகத்தை சுற்றி வரும் இந்த அமெரிக்கர் பற்றி தற்போது தான் கேள்விபடுகிறோம்.

05:04Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!
02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்