vuukle one pixel image

இளைஞர் மீது மோதி தூக்கி வீசிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ; சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

Velmurugan s  | Published: Aug 4, 2023, 10:55 AM IST

கரூர், அண்ணா வளைவு பகுதியில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்று எதிர் திசையில் வந்த, இரண்டு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த கோபால் (வயது 25) என்ற இளைஞர் சிகிச்சைகாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆட்டோவை சாலையில் தாறுமாறாக ஓட்டி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ ஒட்டுநரின் அலசியத்தை கண்டறிந்து. ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் விபத்து நடந்த சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.