குப்பைகளை வைத்து மின்சாரம்..சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

Mar 10, 2023, 8:06 PM IST

 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான மருதா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் முகமது ருபியான். அறிவியல் பாடத்தை விரும்பி படித்து வரும் மாணவன் அவ்வப்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். மேலும், பள்ளியில் நடைபெறும் பல்வேறு அறிவியல் போட்டி தேர்வுகளிலும் வெற்றி பெற்று பல்வேறு அமைப்புகளிடம், பயின்று வரும் பள்ளியிலும் பதக்கம், சான்றிதழ், கோப்பைகளும் பெற்றுள்ளார்.