சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்

சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்

Published : Mar 14, 2024, 12:27 PM IST

காங்கிரஸ் கட்சியில் உழைப்பாளிகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி குற்றம் சாட்டி உள்ளார்.

விளவங்கோடு தொகுதி முன்னாள் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கொடுப்பதாக கூறிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வழங்குகிறது. சில பகுதிகளில் கட்சிக்காரர்களுக்கு மட்டும் இந்த பணம் வழங்கப்படுகிறது.

முதன்மை பதவிக்கு வருவதற்கு எனக்கு அனைத்து தகுதிகளும் இருந்தாலும் நான் பெண் என்பதால் என்னை வேண்டுமென்றே திமுகவும், காங்கிரசும் இணைந்து பின் வரிசையில் அமர வைத்தனர். பாஜகவில் எனக்கு கிடைக்கப் போகும் அங்கீகாரத்தை பொறுத்திருந்து பாருங்கள். 

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அப்பா மாநிலங்களவை உறுப்பினராகவும், மகன் மக்களவை உறுப்பினராகவும் இருப்பார். தொடர்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். என்னை பொறுத்தவரை சாமானியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சுயநலமின்றி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக தான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்
Read more