Watch : தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் விநோத வழிபாடு! - தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

May 29, 2023, 10:55 AM IST

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குரும்பர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குலதெய்வமான வீரபத்ர சுவாமியை கொண்டாடும் வகையில் ஊர் தர்மகர்த்தா சேகர் தலைமையில் விழா ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

காலை முதல் வீரபத்ர சுவாமி, பாரூர் அப்பன் சுவாமி, தொட்டில் அம்மன் வீரம்மாள், உள்ளிட்ட குல தெய்வங்களை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாய் எடுத்து சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையின் மீது பூஜைகள் செய்த தேங்காய்களை உடைத்து வீரபத்திர சுவாமியை வழிபட்டனர்.

மேலும் மேளதாளத்துடன் பக்தர்கள் நடனம் ஆடியவாறு தலையில் தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்