செய்முறை தேர்வுகள் நிறைவு; மேசை, நாற்காலிகளை உடைத்து வீடியோ வெளியிட்ட மாணவிகள்

செய்முறை தேர்வுகள் நிறைவு; மேசை, நாற்காலிகளை உடைத்து வீடியோ வெளியிட்ட மாணவிகள்

Published : Mar 08, 2023, 04:59 PM IST

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அமானிமல்லாபுரம் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலி, மின்விசிறி ஆகியவற்றை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அமானிமல்லாபுரம் மேல்நிலைப் பள்ளியில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை விளக்கம் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. தேர்வு முடிந்த கடைசி நாளான  நேற்று மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலி, மின்விசிறி ஆகிய பொருட்களை அடித்து உடைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் தந்தவுடன் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு
Read more