Watch : ஆஸ்கர் விருது பெற்ற 'The Elephant Whisperers' ஒட்டுமொத்த இந்தியாவிற்கான மகிழ்ச்சி -பொம்மன் பெருமிதம்

Mar 13, 2023, 4:53 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்மையில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் குட்டிகளை யானை கூட்டத்துடன் இணைக்கும் பணியினை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் இருந்து பொம்மன், பெல்லி உள்ளிட்ட யானை பாகன்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறும்படத்தில் வரும் யானை குட்டியை பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோர் இணைந்து வளர்த்து பராமரித்தனர். இவர்கள் அந்த குட்டி யானைகளை வளர்க்கும் முறைகள் குறித்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது திரைத்துறையின் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்டி யானைகளை, யானைக் கூட்டங்களுடன் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொம்மனை ஏசியாநெட் நிருபர் சந்தித்த போது, 'The Elephant Whisperers' படத்திற்கு கிடைத்த அங்கீகாரம், தமக்கும் தம்மை போல வனத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் பெருமையாக உள்ளதாகவும், இது ஒட்டு மொத்த இந்தியாவுக்கே மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக உள்ளதாகவும் பொம்மன் தெரிவித்தார்.