தருமபுரி மாவட்டத்தில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 22 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பலத்த பாதுகாப்புடன் ஆற்றில் கரைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை கொண்டு வந்தனர். ஆனால், அனுமதிக்கப்பட்ட உயரத்தை மீறி சிலை எடுத்து வரப்பட்டதால் பாலக்கோடு காவல் துறையினர் சிலையை பறிமுதல் செய்து காவல்துறை வசம் பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.
கடைசி நாளான இன்று பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் விநாயகர் சிலையை வழிபாடு செய்ய வேண்டும் என்ற இளைஞர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக விநாயகர் சிலைக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலையை சனத்குமார் ஆற்றில் கரைத்தனர்.