Lu Lu Hypermarket : தமிழகத்தின் முதல் பிரம்மாண்ட லுலு மால் - கோவையில் திறப்பு

Jun 14, 2023, 8:18 PM IST

சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக விளங்கும் கோவையில் அடுத்தடுத்து பல முன்னணி ஐ.டி சேவை நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருவதோடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புகழிடமாக மாறி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மெட்ரோ திட்டம் முதல் பல இன்பரா கட்டமைப்புகளை மேம்படுத்தியும் விரிவாக்கம் செய்து வருகிறது.  சமீபத்தில் மத்திய ரயில்வே துறை அறிமுகம் செய்த வந்தே பாரத் ரயில் கூட சென்னை - கோவை மத்தியில் இயங்கும் வண்ணம் அமைந்தது.

இதற்கு ஏற்ப கோயமுத்தூரில் கமர்சியல் ரயில் எஸ்டேட் துறை எப்போதும் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. பெரும் நகரங்களில் இருந்து கோயமுத்தூருக்கு அலுவலகத்தை விரிவாக்கம் செய்வது மூலம் அலுவலகத்திற்கான டிமாண்ட் முதல் முன்னணி பிராண்ட்களின் கடைகள் கோயமுத்தூரில் விரிவாக்கம் செய்வதால் கமர்சியல் ரயில் எஸ்டேட் பிரிவு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து விலையும் அதிகரித்து வருகிறது.

பொதுவாக மால்கள் என்றால் பல மாடி கட்டிடமாக தான் இருக்கும், லுலு மால் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வடிவமைப்பில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைக்க கூடும். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமை இடமாக கொண்ட லுலு நிறுவனம், கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில் தான் லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டியுள்ளது.தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி ராஜா இந்த மாலினை திறந்து வைத்தார்.

iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

புது போன் வாங்க போறீங்களா.. ஆல் ஏரியாவில் பட்டையை கிளப்பும் Nothing Phone 2 வரப்போகுது !!