Jun 7, 2023, 11:44 AM IST
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டீக்கடையில் பணிபுரியும் ஊழியர் எடிசன் இன்று வழக்கம் போல் கடையை திறக்கமுயன்றுள்ளார். அப்போது கதவின் அருகில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர் இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் கடையினுள் பதுங்கி இருந்த ஐந்தடி நீள நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.மேலும் அந்த பாம்பை தாங்கள் கொண்டு வந்த பையிக்குள் அடைத்த தீயணைப்புத்துறை வீரர்கள் அடர்ந்த வனப்பகுதியில் விடுவதாக தெரிவித்தனர்.