Jun 4, 2023, 5:38 PM IST
கோவை மாவட்டம், சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி என்ற சிறுவனின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது. இந்த காதணி விழாவிற்கு கோவையில் அடையாள சின்னங்களான ரயில்நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், மருதமலை கோவில் உள்ளிட்ட 8 மாதிரிகளை சீர்வரிசையாக கையில் ஏந்தி, சாரட்டு வண்டியில் அழைத்து வந்தனர். கோவையை பெருமைப்படுத்தும் விதமாக இந்த அடையாள சின்னங்களை சீர் வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மேலும் நமது மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தே சண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க..அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு அப்டேட் கொடுத்த வானிலை மையம் - 11 மாவட்டங்களில் கனமழை.!!