கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே மதுபோதையில் பெண் ஒருவர் சாலையில் படுத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகேஸ்வரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த மகேஸ்வரி அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த மகேஸ்வரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தள்ளாடும் போதையில் சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார்.
மேலும் தனக்கு அரசு வேலை வேண்டும் என்றும், சாலையில் வரும் வாகனங்களை மறித்தும் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மற்றும் காவல் துறையினர் அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மது போதையில் பெண் ஒருவர் போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் ரகளை செய்தது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.