கோவையில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

Dec 9, 2023, 10:49 AM IST

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பொழியவில்லை. நகரின் அனைத்து இடங்களிலும் அவ்வப்போது வெயில் அடித்தது. வெயில் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை பகுதிகளில் அடை மழை பொழிந்தன. 

இந்த நிலையில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு கோவை நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. செல்வபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், உக்கடம், புலியகுளம், ஹோப்ஸ், மசக்காளிபாளையம், பீளமேடு, கவுண்டம்பாளையம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

மழை காரணமாக இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதே போல கோவை புறநகர் பகுதிகளிலும்  தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் செல்வபுரம்  பகுதியில்  மழையின் காரணத்தினால் மின் தடை ஏற்பட்டிருக்கின்றது.