Jan 21, 2023, 7:33 PM IST
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். திராவிடர் விடுதலை கழக செயலாளர் கொளத்தூர் மணி, பேரறிவாளன், அற்புதம் அம்மாள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் ஆ.ராசா, செந்தில்பாலாஜி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.