ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோவை விழா நிர்வாகிகள்; ஆனந்தத்தில் துள்ளி குதித்த குழந்தைகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோவை விழா நிர்வாகிகள்; ஆனந்தத்தில் துள்ளி குதித்த குழந்தைகள்

Published : Dec 29, 2023, 10:46 PM IST

கோவை விழாவை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்று அவர்களை உற்சாகப்படுத்தினர்.

கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை மூன்று நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது.  இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 8ம் தேதி வரை இந்தப் பேருந்தில் முன்பதிவு செய்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. 

இப்பேருந்தில் கோவை மாநகருக்குள் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம்.  தினமும் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பேருந்தில் பயணம் செய்வதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று ஆதரவற்ற 20 குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்றனர். 

இவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து காந்திபுரம் வரை பயணம் செய்தனர். முதல் முறையாக டபுள் டக்கர் பேருந்தில் பயணம் குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.  இவர்களுக்கு கோவை  விழா நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்வித்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more