கோவையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு வந்த அண்ணாமலை மேடை ஏறியதும் போடியத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்றினார். 'பெண்மையை போற்றுவோம்' என்ற வாசகத்துடன் அண்ணாமலையின் புகைப்படமும் அந்தப் பதாகையில் இடம்பெற்றிருந்தது. நிகழ்ச்சியில் பேசும்போது அந்த பதில் அளித்த அண்ணாமலை, "மகளிர் நிகழ்ச்சியில் எனது புகைப்படம் வேண்டாம் என்பதற்காக அதனை அகற்றினேன்" என தெரிவித்தார்.