Watch : கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது!

Watch : கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது!

Published : Dec 10, 2022, 01:50 PM IST

கோவையில் 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து, டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
 

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது அது கள்ள நோட்டு என்று தெரியவந்தது. உடனே அவர் மற்ற ஊழியர்கள் துணையுடன் வாலிபரை மடக்கி பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இது குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கோவைபுதூர் அறிவாளி நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது. இந்த கள்ள நோட்டுகளை கீழே கிடந்ததை எடுத்து வந்ததாக காவல் துறையிடம் தெரிவித்து உள்ளார். 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. ரமேஷ் இடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் 56 பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான ரமேஷ் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரமேஷ் பொய்யான தகவலை கூறுவதாகவும் விரைவில், ரமேஷுக்கு இந்த நோட்டுகளை கொடுத்தவர் யார் ? , இதில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more