Watch : கோவையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற நபர்! சிசிடிவி காட்சிகள்!

Watch : கோவையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற நபர்! சிசிடிவி காட்சிகள்!

Published : Nov 23, 2022, 02:14 PM IST

கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வி, திருகுமரன் நகர் பகுதியில் தனது இருமகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் வேலைக்கு புறப்படுவதற்காக வீட்டுக்கு உள்ளே இருந்து வெளியே வருவதற்கு கதவை திறந்து உள்ளார். அப்போது கதவுக்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத நபர் நின்று கொண்டு இருப்பதை பார்த்த செல்வி எதற்கு நிற்கிறாய் என்று கேட்ட போது அந்த நபர் வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்க்கச் சொன்னதாக கூறியுள்ளார்.

சந்தேகமடைந்த செல்வி கதவை மூட சென்ற போது அந்த நபர் செல்வியின் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து செல்வி கீழே தள்ளி விட்டு தப்பித்து ஓடியுள்ளார். பதறிக் கொண்டு வீட்டை வெளியே வந்த செல்வி பார்த்த போது தன்னிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த நபர் வெளியே காத்திருந்த மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததும் ஒருவர் வெளியே காத்திருந்து நோட்டமிடுவதும் மற்றொரு நபர் வீட்டிற்குள் புகுந்து செல்வியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு தயார் நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது. வீட்டில் செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி இருவரும் இந்த சங்கிலி பறிப்பை அரங்கேற்றியுள்ளனர். மேலும் இச்சமபவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு சங்கிலி பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more