Jul 8, 2023, 6:34 PM IST
கோவை அருகே பாம்பு பிடி வீரரான அமீன் வேலை காரணமாக அவசரமாக வெளியே சென்று கொண்டி இருந்த போது, செல்லும் வழியில் சாலை ஓரமாக இருந்த புல்லுக்காடு பகுதியில் மக்கள் கூட்டமாகப் பதற்றத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவரும் அக் கூட்டத்தில் போய் பார்த்தார்.
அங்கே இரண்டு பெரிய பாம்புகள் உடலைப் பிணைத்தபடி கழுத்தை உயர்த்தி ஆடிக் கொண்டு இருந்தன. இரண்டுமே சாரைப் பாம்புகள். இப்பாம்பை அறியாதவர்கள் குறைவு. இவை எளிதில் பார்க்கப்படக் கூடியவை என்பதால், நாம் அறிந்த முதல் பாம்பு இதுவாகத் தான் இருக்கும். இரண்டு பாம்புமே ஆறடி நீளத்தில் மஞ்சள் நிறத்திலும் மற்றும் கரிய நிறத்திலும் இருந்தன. இவை கருமை, கரும் பச்சை, மஞ்சள், பழுப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றன.
அருகில் இருந்தவர்கள் சாரைப் பாம்புகள் இணை சேரும் காட்சியை பார்த்து கொண்டு இருந்தார்கள். மேலும் சிலர் அதனை அடித்து கொல்ல முடிவு செய்தனர். ஆனால் அங்கிருந்த பாம்பு பிடி வீரர் அமீன் அவர்களை தடுத்து அது இணை சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளதாகவும், இதனை கொல்ல வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறிது நேரம் கழித்து அந்தப் பாம்புகள் அப்பகுதியில் இருந்து ஊர்ந்து சென்றன.