Jul 27, 2019, 12:08 PM IST
கிரிக்கெட்டில் அண்மைக்காலமாக பந்து ஸ்டம்பில் அடித்தும் ஸ்டிக் கீழே விழாததால் பவுலிங் அணி விக்கெட்டை பெறமுடியாமல் போன சம்பவங்கள் ஏராளமாக நடந்துவருகிறது. பந்து ஸ்டம்பில் பட்டதும் ஸ்டிக் கீழே விழுந்தால்தான் ஐசிசி விதிப்படி அது அவுட்; ஸ்டிக் கீழே விழவில்லையெனில் அது அவுட்டில்லை.
முன்பெல்லாம் பந்து ஸ்டம்பில் பட்டாலும் ஸ்டிக் கீழே விழாத சம்பவம் அரிதினும் அரிதாகத்தான் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி நடக்கிறது. சர்வதேச போட்டிகளில் அண்மைக்காலத்தில் அடிக்கடி இவ்வாறு நடந்துள்ளது.
பந்து ஸ்டம்பில் பட்டால், ஒன்று ஸ்டிக் கீழே விழும் அல்லது விழாமல் இருக்கும். இது இரண்டில் ஒன்றுதான் நடக்கும். இது இரண்டுமே இல்லாமல், கிளப் போட்டி ஒன்றில் ஸ்டம்பில் பந்து பட்டதும், நகர்ந்த ஸ்டிக், ஒரேயொரு ஸ்டம்பின் பேலன்ஸில் கீழே விழாமல் நின்றது. ஸ்டிக் நகர்ந்தாலும் கீழே விழவில்லை என்பதால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.