Aug 22, 2022, 12:14 PM IST
மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் என்ற இடத்தில் டோல் வரி செலுத்தாமல் சென்றவரை, அங்கு பணியில் இருந்த பெண் வரி செலுத்துமாறு கட்டாயப்படுத்தினார். இதை விரும்பாத அந்த நபர் பணியில் இருந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். கொஞ்சமும் இதை எதிர்பார்க்காத அந்தப் பெண் தனது காலணியால் அந்த நபரை அடித்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.