Aug 22, 2022, 5:48 PM IST
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் MLA-வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐதராபாத் வந்துள்ளார்.
கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபின்பு வெளிவந்த அமித்ஷாவுக்கு, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை, ஓடிப்போய் காலணி எடுத்துக்கொடுத்தார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது