Viral : தண்ணீர் கைப்பம்பில் இருந்து மாறி மாறி வெளியேறும் தண்ணீரும், நெருப்பும்! - மக்கள் பீதி!

Aug 25, 2022, 3:12 PM IST

மத்தியபிரதேச மாநிலம் கச்சார் கிராமத்தில் ஒரு தண்ணீர் கைப்பம்பில் இருந்து தண்ணீரும், நெருப்பும் மாறி மாறி வெளியேறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைந்து இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்தக் காட்சியை உள்ளூர் கிராம மக்கள் வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.