Apr 12, 2024, 3:00 PM IST
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடும் வெயில் காரணமாக பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். அதில் ஒன்று தான் ஹீட் ஸ்ட்ரோக். மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
பொதுவாக மனிதர்களின் உடல்நிலை 98.6 டிகிர் ஃபாரன்ஹீட், 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று அதிக நேரம் வெயிலில் இருப்பதால், உடலின் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து 104 ஃபாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. கடுமையான வெயில் காலத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக சில நேரங்களில் வியர்வை வராது. உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் அமைப்பு செயல்படாமல் போனால் உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும். இதனால் சிலர் மயக்கம் போட்டு கீழே விழுவார்கள். சில நேரம் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் என்னென்ன?
உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம்
வாந்தி மற்றும் குமட்டல்
வலிப்பு
வேகமாக மூச்சுவிடுவது
மயக்கம்
குழப்பம்
அதிக வியர்வை மற்றும் மூச்சுத்திணறல்
வியர்வை இல்லாமல் வறண்ட சருமம்,
மிகவும் வெளிர் அல்லது சிவந்த தோல்
உணர்வு இழப்பு
நுரையீரலில் சத்தம்
குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுவது
ஹீட் ஸ்ட்ரோக் : எப்படி தற்காத்து கொள்வது?
வழக்கமான நாட்களை விட அதிகளவு, தண்ணீர், காய்கறிகளை எடுத்துக் கொள்வது நல்லது. அதே நேரம் கடைகளில் கிடைக்கும் கார்பனேற்றம் சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் சூடான பானங்களைத் தவிர்க்கவும், வியர்வை மூலம் உங்கள் உடலில் இருந்து இழந்த திரவங்களை நிரப்ப நீரேற்றத்துடன் இருப்பது அவசியம். உங்கள் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறனைப் பாதிக்கும் என்பதால் மதுபானத்தையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். முடிந்தால் வீட்டிலேயே ஜுஸ் போட்டு குடிக்கலம்.. அல்லது மோர் குடிக்கலாம்.
வெயிலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தளர்வான பருத்தி ஆடை மற்றும் தொப்பி அணிந்து வெளியே செல்வது நல்லது.. நீங்கள் வெளியே சென்றால், மாலை 5 மணிக்குப் பிறகு அல்லது காலை 11 மணிக்கு முன் செல்ல முயற்சிக்கவும். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏர் கண்டிஷனிங் மற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்தவும். வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். வெயில் காலங்களில் ளிப்புறங்களில் உடற்பயிற்சி மற்றும் பிற தீவிர அல்லது கடுமையான உடல் செயல்பாடுகளைத் தவிர்க்கவும். உங்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால், ஆரம்பித்தால், அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துங்கள். நிழலில் அல்லது குளிர்ச்சியான பகுதிக்கு செல்லுங்கள். லேசான தலைவலி, குழப்பம் அல்லது மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக குளிர்ச்சியான இடங்களில் ஓய்வெடுப்பது நல்லது.