Rayar r | Updated: Feb 1, 2025, 6:13 PM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வருமான வரி சலுகை, விவசாயிகளுக்கு கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு என பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், வருமான வரி சலுகை மூலம் மக்கள் கையில் அதிக பணம் புழங்க செய்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.