GP muthu : கப்பல் போன்ற காரில் அமர வைத்து ஜிபி முத்துவை கலங்கடித்த நண்பர்கள்... வைரலாகும் வீடியோ இதோ

GP muthu : கப்பல் போன்ற காரில் அமர வைத்து ஜிபி முத்துவை கலங்கடித்த நண்பர்கள்... வைரலாகும் வீடியோ இதோ

Published : Nov 01, 2022, 09:51 AM IST

கிளச்சில் கால் வைக்க சொல்கிறார் வெற்றி. பின்னர் அதிலிருந்து கால் எடுத்தால் அவ்வளவுதான் என கூற, ஜி பி முத்து தனது வழக்கமான வெகுளித்தளத்தை காட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் அநேகம் பேருண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தான் ஜிபி முத்து. தனது தனித்துவமான பேச்சாலும் ரசிகர்களை அதிகப்படுத்திக் கொண்டவர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜிபி முத்து அந்த ஊர் ஸ்லாங்கில் பேசுவது பலரையும் அவர் பக்கம் ஈர்த்தது. கடுமையான  விமர்சனங்கள் பெற்றிருந்த போதிலும் தன்னுடைய பாதைகள் சரியாக சென்று கொண்டிருந்தார். மோசமான வார்த்தைகளால் இவர் பேசுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தது.

பின்னர் யூட்யூபறாக மாறிய ஜி பி முத்துவிற்கு சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமாகினர். இதனால் இவரது பிரபலமும் கூடிப்போனது. விளம்பர படங்களிலும் படங்களிலும் நடிக்க துவங்கினார் ஜி பி முத்து. என்ன வாழ்க்கைடா என்னும் மியூசிக் வீடியோவிலும் இவர் தோன்றி உள்ளார். பின்னர் படங்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.  

இவ்வாறு சோசியல் மீடியா மூலம் பிரபலமான ஜி பி முத்துவிற்கு தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது. இது இவருக்கு மேலும் புகழை கூட்ட இவரை சோசியல் மீடியாவில் பார்த்ததற்கும் ஒரிஜினாலிட்டிக்கும் நிறைய வித்தியாசங்களை ரசிகர்கள் கண்டுகொண்டனர். இவருக்கு ஆதரவும் கூடியது. கடின உழைப்பாளியாகவும் மிகவும் மென்மையானவராகவும் காட்சியளித்த ஜி பி முத்து வெற்றியாளராக வர வாய்ப்பு உள்ளதாகவே அவரது ஆர்மி கூறி வந்தது. 

ஆனால் தனது மகன் மீதான அன்பு காரணமாக 13 வது நாளில் தானாகவே வெளியில் சென்றுவிட்டார் ஜி பி முத்து. இதைத்தொடர்ந்து தனது பழைய பாணியை கையில் எடுத்த இவர் மீண்டும் youtube இல் காட்சி அளிக்க ஆரம்பித்தார். முதலில் தனது பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கி கொடுப்பது, தீபாவளி கொண்டாடுவது என துவங்கிய இவரது மறு பிரவேசத்தில்  தற்போது கப்பல் போன்ற காரில் அமர்ந்திருக்கும் வீடியோவும் வெளியாகி உள்ளது. மற்றொரு ஊடக பிரபலமான விஎஸ் வெற்றியின் காரில் தான் ஜிபி முத்து அமர்ந்திருக்கிறார். அவரை கிளச்சில் கால் வைக்க சொல்கிறார் வெற்றி. பின்னர் அதிலிருந்து கால் எடுத்தால் அவ்வளவுதான் என கூற, ஜி பி முத்து தனது வழக்கமான வெகுளித்தளத்தை காட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மிஷ்கின் பாட்டுக்கு செம டான்ஸ்; வைரலாகும் பிக் பாஸ் சவுந்தர்யாவின் வீடியோ!
00:22பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?
00:58அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் கொடுத்து சைலன்டாக்கிய பிக் பாஸ் - ஏன்? வீடியோ!
பிக்பாஸில் டைட்டில் ஜெயிக்காமல் டஃப் கொடுத்த பிரபலங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நயன்தாராவின் தங்கச்சி
பிக்பாஸ் சீசன் 8ல் வரப்போகும் பழைய போட்டியாளர்கள் ! வெளியான சூப்பர் அப்டேட்
26600:00Bigg Boss season - 7 Review | இந்த வாரம் Bigg Boss-ல் மாயா நாமினேட் ஆகாததன் பின்னணி என்ன?
583:20bigg boss 6 promo : காலில் விழுந்தும் கேட்காததால் கடுப்பான ஜனனி..குயின்சியை விளாசும் ப்ரோமோ இதோ
583:20நீயெல்லாம் ஜீரோ.... மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம் - மீண்டும் வெடித்த சண்டையால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு
583:20 Bigg Boss Tamil Season 6 Promo : புறக்கணிப்பால் கடுப்பான குயின்சி...விக்ரமனுடன் மோதல் ஆரம்பம்