லவ்வருடன் செல்போனில் பேசிய காதலன்.. நொடியில் நிகழ்ந்த விபரீதம்…!

Published : Sep 19, 2021, 07:49 PM IST
லவ்வருடன் செல்போனில் பேசிய காதலன்.. நொடியில் நிகழ்ந்த விபரீதம்…!

சுருக்கம்

நாமக்கல் அருகே காதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர் கிணற்றில் விழுந்து மறுநாள் மீட்கப்பட்டார்.

நாமக்கல்: நாமக்கல் அருகே காதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர் கிணற்றில் விழுந்து மறுநாள் மீட்கப்பட்டார்.

திருவாரூரை சேர்ந்தவர் ஆசிக்.  இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். வேலை செய்யும் இடத்திலேயே அவர் தங்கி உள்ளார். பணி முடிந்த பின்னர் இரவு நேரத்தில் தமது காதலியுடன் நீண்ட நேரம் அளவளாவது வழக்கம்.

இந் நிலையில் வழக்கம் போல நூற்பாலை அருகில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்று பகுதியின் அருகில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது பேச்சு சுவாரசியத்தில் ஆசிக் கிணற்றில் விழுந்துள்ளார்.

தம்மை காப்பாற்றுமாறு அவர் அபய குரல் எழுப்ப ஆசிக்கை மீட்க தான் யாரும் வரவில்லை. கிட்டத்தட்ட 10 மணி நேரத்துக்கும் மேலாக கிணற்றில் தவித்து இருக்கிறார். விடிந்த பிறகே அவர் கிணற்றில் இருக்கும் விவரம் தெரிய வர தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கி அவர்கள் ஆசிக்கை மீட்டு மேலே அழைத்து வந்தனர். கிணற்றில் விழுந்ததால் காயம் அடைந்த ஆசிக் பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்