ED Raid : பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாண்டியாகோ மார்ட்டின் என்று அழைக்கப்பட்டும் லாட்டரி மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான M/s ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற அசோசியேட்ஸ்க்கு எதிரான விசாரணை தொடர்பாக PMLA, 2002ன் விதிகளின் கீழ் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுமார் 22 வளாகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த அதிரடி சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ரூ. 12.41 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதனுடன் ரூ. 6.42 கோடி பணமும் சிக்கியுள்ளது.
சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான M/s ஃபியூச்சர் கேம்ஸ் நிறுவனம் மற்றும் லாட்டரி நிறுவனத்தின் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "மற்ற நிறுவனங்களை செயல்பட அனுமதிக்காமல் தடுத்தல், போலி லாட்டரி சீட்டுகளை விற்றதன் மூலமும், வெற்றி பெற்ற பரிசுகளைக் கையாள்வதன் மூலமும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்குப் பணப் பரிவர்த்தனைக்கு எதிராகப் பெரும் தொகைக்கான பரிசுச் சீட்டுகளை வாங்குவதன் மூலமும், லாட்டரிச் சந்தையை சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாகவும் லாட்டரி மார்ட்டின் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அரசு கருவூலத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது அவரது நிறுவனம் என்றும் கூறப்படுகிறது.
undefined
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக வெற்றிக்கழகம்
இதேபோல கடந்த ஆண்டும் லாட்டரி மார்ட்டின் மீது அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர், கேரளாவில் அரசு லாட்டரியை மோசடி செய்ததன் மூலம் சிக்கிம் அரசுக்கு 900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் “லாட்டரி மன்னனுக்கு” எதிரான வழக்கில் சுமார் 457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏஜென்சி பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ED has conducted search operations at 22 premises in the States of Tamil Nadu, West Bengal, Karnataka, Uttar Pradesh, Meghalaya and Punjab under the provisions of PMLA, 2002 in connection with investigation against Santiago Martin and his entity M/s Future Gaming and Hotel… pic.twitter.com/QETk5MgYXK
— ED (@dir_ed)மார்ட்டினுக்கு எதிராக மத்திய ஏஜென்சி தங்களது விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள "லாட்டரி மன்னன்" சாண்டியாகோ மார்ட்டினின் கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து அமலாக்க இயக்குனரகம் (ED) கடந்த வெள்ளிக்கிழமை 8.8 கோடி பறிமுதல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசம் இனி வளர்ச்சிக்குத் தடையாக இருக்காது; முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி!