மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள நைஜீரிய மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாகராஜில் மகா கும்பமேளா கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படும் ஒரு பொன்னான தருணம். மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் பிரயாகராஜுக்கு வருகிறார்கள். இது நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பேசப்படுகிறது. இது ஒரு அழகான அனுபவம், இதை மக்கள் எப்போதும் தங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளத் தயராக இருக்கிறார்கள். மகா கும்பமேளா அடுத்த ஆண்டு ஜனவரி 13 முதல் ஜனவரி 26, 2025 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த தருணத்தில் கலந்து கொள்ள நைஜீரிய நாட்டு மக்களை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கான பயணத்தின் முதல் கட்டமாக நைஜீரியாவுக்குச் சென்றபோது இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
अगले साल 13 जनवरी से 26 फरवरी तक प्रयागराज में ‘महाकुम्भ-2025’ होने जा रहा है...
आप इस दौरान भारत आएं और अपने बच्चों व नाइजीरियन दोस्तों को भी साथ लाएं। प्रयागराज महाकुम्भ में आएं तो अयोध्या जी और काशी भी जाने का प्रयास करें...: प्रधानमंत्री श्री जी… pic.twitter.com/wg8R6soPNa
மேலும் உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த அருமையான மஹா கும்பமேளாவில் பங்கேற்க நைஜீரிய மக்களை அன்போடு அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.