
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் தனது வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தபோது, அவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை காட்டிய விஜய், ஜன்னல் வழியாகக் கையசைத்து "வேகமாக வர வேண்டாம், பாதுகாப்பாகச் செல்லுங்கள்" எனச் சைகை மூலம் அன்புக்கட்டளை இட்டது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இத்தகைய உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு இடையே, நெசவாளர்களுக்கு ₹10 லட்சம் காப்பீடு, பழைய ஓய்வூதியத் திட்டப் பரிசீலனை மற்றும் காவலர்களுக்கான ஊதிய உயர்வு போன்ற அதிரடி வாக்குறுதிகளையும் வழங்கி, வரும் ஏப்ரல் 16-ல் முழுமையான தேர்தல் அறிக்கை வெளியாகும் என்ற அறிவிப்புடன் தனது திருப்பூர் பயணத்தை எழுச்சியுடன் நிறைவு செய்தார்.