தீபாவளியையொட்டி தி.நகரில் போக்குவரத்து மாற்றம்.. அறிவித்தது போக்குவரத்து காவல்துறை!!

By Narendran SFirst Published Oct 6, 2022, 11:18 PM IST
Highlights

தீபாவளியையொட்டி தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுக்குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கைக்கு கடத்த முயன்ற 1,100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

அதன்படி, தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் கோட்ஸ் சாலைச் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டைச் சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும். சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும், இத்தகைய வாகனங்கள் இரவு 23:00 மணி முதல் காலை 07:00 மணி வரை தி நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

இதையும் படிங்க: வரும் 17 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..? எத்தனை நாட்கள் நடைபெறுகிறது..? வெளியான தகவல்

ஏற்கனேவே பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் தணிகாசலம் சாலை பன்னடுக்கு வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாசம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். பொதுமக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தக்க ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!