Asianet News TamilAsianet News Tamil

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 100 கிலோ கடல் அட்டைகளை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மூன்றுபேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

thousand hundred Kg Sea cucumber seized in ramanathapuram
Author
First Published Oct 6, 2022, 5:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த தேவதளை பகுதியில் இலங்கைக்கு கடத்துவற்காக பல லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதப்படுத்துப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை துணைக்காண்காணிப்பாளர் தனஞ்ஜெயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாலையில் மண்டபம் மற்றும் வேதாளை கடற்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

thousand hundred Kg Sea cucumber seized in ramanathapuram

சோதனையின் போது தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதப்படுத்தி வைத்திருந்த  மூன்று  பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 100 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனர். மேலும் மரைக்காயர் ,குலாம் முகமது, நஜூப் அகிய மூன்று பேரை கைது செய்து மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

thousand hundred Kg Sea cucumber seized in ramanathapuram

இந்த கடல் அட்டை பதப்படுத்தப்பட்டு இலங்கை வழியாக சீனா, ஜப்பன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தயிருந்தது தெரியவந்தது. இது குறித்து மண்டபம் வனத்துறையினர் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios